விவசாயின் வியர்வை
முகப்புரை
இந்த நாவல்,
“விவசாயியின் வியர்வை”, ஒரு சாதாரண விவசாயியின் வாழ்க்கைப் போராட்டத்தையும், அவன்
உழைப்பின் மணத்தையும், அவன் வியர்வையின் வலிமையையும் உலகிற்கு உணர்த்தும்
நோக்கத்தோடு எழுதப்பட்டது.
இது ஒரு
கற்பனைக்கதை என்றாலும், அதன் உள்ளே ஒவ்வொரு விவசாயியின் கண்ணீர், ஒவ்வொரு
விவசாயியின் நம்பிக்கை, ஒவ்வொரு விவசாயியின் கனவு மறைந்துள்ளது.
இந்த நாவல்
வாசிப்பவர்கள் விவசாயியின் வாழ்க்கையை அருகில் உணர்ந்து, அவர்களின் உழைப்பின்
மதிப்பை புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
அறிமுகம்
விவசாயி – அவர்தான்
உணவின் தந்தை, அவர்தான் நாட்டின் முதுகெலும்பு.
ஆனால் எத்தனை
பேருக்கு தான் அந்த முதுகெலும்பின் வலி தெரியுமோ?
கடன், கஷ்டம்,
சமூகத்தின் புறக்கணிப்பு, மழை, வறட்சி, நிலத்தின் விலை – இவற்றால் எப்போதும்
போராடிக் கொண்டே இருக்கும் அவன், எப்படியும் உயிர் துடிக்கும் வரை உழைப்பதை
நிறுத்த மாட்டான்.
அந்த விவசாயியின்
கதையை இந்த நூல் உங்களுக்கு சொல்கிறது.
அர்ப்பணிப்பு
இந்த நாவலை எல்லா
விவசாயிகளுக்கும், அவர்களின் வியர்வை துளிகளுக்கும், அவர்களின் கனவுகளுக்கும்,
இந்த மண்ணுக்கும் அர்ப்பணிக்கிறேன்.
-S. Sipiraj
விவசாயியின் வியர்வை
“உழைப்பின் விலை எப்போதும் வியர்வையால் தான் செலுத்தப்படும்.”
இது ஒரு விவசாயியின் வாழ்க்கை போராட்டக் கதை மட்டுமல்ல,
மண்ணின் மணத்தை, மனிதனின் மனதை,
வெற்றியின் உண்மையை உணர்த்தும் ஆழமான பயணம்.
------------------------------------
முதல் பதிப்பு (First Edition) – 2025
எழுத்தாளர் : S. Sipiraj
அனைத்து உரிமைகளும்
பாதுகாக்கப்பட்டவை.
இந்த புத்தகத்தின் எந்தப்
பகுதியும்
எழுத்தாளர் எழுத்து அனுமதி
இல்லாமல்
மறு அச்சு, நகல் எடுப்பு
அல்லது
மின்னணு வடிவில் பகிர்வு செய்யப்பட
கூடாது.
Printed in Sri Lanka
கதிரவன் பிறக்காத அந்தப் பொழுது, கிராமத்தின் அமைதியை
உடைத்த ஒரே வீடு முருகனுடைய குடிசை. சிறிய வீட்டின் சுவர் சிதிலமடைந்து,
ஓரங்கட்டிய கூரையில் மழை வந்தால் துளிகள் வழிந்துவிடும். ஆனாலும் அந்த வீட்டு
வாசலில் நிற்கும்போது காற்றோடு கலந்த ஒரு மணம் பசுமையாய் வீசும் — அது மண்ணின்
மணம். அந்த மணமே முருகனின் உயிரோடு கலந்திருந்தது.
முருகன் சிறுவயதில் இருந்தே நிலத்தை நேசித்து வளர்ந்தவன்.
இரண்டு ஏக்கர் நிலம் தான் இருந்தது. ஆனாலும் அவன் தந்தை அந்த நிலத்தை ஒரு உயிராகக்
காப்பாற்றினான். தந்தை அடிக்கடி சொல்வான்: “இந்த நிலம் தான் நம்ம வாழ்வு பா…
வியர்வை சிந்தினா அது உன்னை பசுமையாய் வளர்க்கும்.” அந்த வார்த்தை முருகனின்
மனசுக்குள் பொறிக்கப்பட்ட கல் போல பதிந்திருந்தது. ஆனால் காலம் மாறிவிட்டது.
மழை துரோகம் செய்த ஆண்டு, நிலம் பிளந்து, விதை போனாலும்
முளை வரவில்லை. வீட்டுக்குள் உணவு இல்லாமல் பிள்ளைகள் பசி கண்ணீரோடு
படுத்துக்கொண்டார்கள். மனைவி முகம் சுருங்கி, “நம்ம பிள்ளைகளுக்கு ஒரு நாள் வயிறு
நிரம்புமா முருகா?” என்று கேட்டவுடன் முருகனின் நெஞ்சு உருகியது. ஆனால் அவன்
வாயிலிருந்து வந்த ஒரே வார்த்தை: “நம்ம வாழ்க்கை மண்ணோட தான். ஒருநாள் நம்ம
வியர்வை பொன்னாக மாறும்.”
ஆனால் அந்த நாளுக்கு வழி எளிதாக இருக்கவில்லை. கடன் வாங்கி
விதை போட்டான். வட்டி சாவுகாரன் தினமும் வந்து கதவத்தடித்து அவனை அவமதித்தான்.
உறவினர்கள் கேலி செய்து, “இந்த நிலம் விற்று நகரம் போடா, coolie வேலை பண்ணுடா. விவசாயம் முடிஞ்சுடுச்சு” என்று சொன்னார்கள்.
அந்த வார்த்தைகள் அவன் மனதை குத்தினாலும், நிலத்தை விட முடியவில்லை.
ஒருநாள் ஊருக்கு வெளியே போனபோது, ஒரு சிறிய புத்தக கடையில்
பழைய ஒரு டையரியை கண்டான். அதில் இயற்கை விவசாயம், மழைநீர் சேமிப்பு, பசுமை
விதைகள் பற்றி எழுதப்பட்டிருந்தது. அவன் அந்த வார்த்தைகளைப் படிக்கும்போது
உள்ளத்தில் புதிதாய் ஒரு விதை விதைக்கப்பட்டது. “இதுதான் என் வழி” என்று முடிவு
செய்தான்.
வீட்டிற்கு திரும்பிய முருகன், chemical உரங்களை விட்டு, பசுமை முறையில் உழவுத்தொழிலைத்
தொடங்கினான். இயற்கை உரம், மாட்டு சாணம், பசுமை சாறு எல்லாம் பயன்படுத்தினான்.
முதலில் கிராமம் முழுக்க அவனை கேலி செய்தது. “பசும்புல்லையே தின்னிக்கிட்டு
போவான்” என்று சிரித்தார்கள். ஆனால் முருகன் தனது உழைப்பில் அசைக்காமல் நின்றான்.
மாதங்கள் கடந்து போனது. வறண்டிருந்த நிலம் பசுமையாய்
மாறியது. செடிகளில் முளைகள் வெளுத்தன. காய்கறிகள், பழங்கள், அரிசி எல்லாம்
விளைச்சல் கொடுக்க ஆரம்பித்தது. முருகன் வீடு முழுக்க புதிய உயிர் ஊற்றியது.
நகரத்திலிருந்து மக்கள் வந்து நேரடியாக organic vegetables வாங்கினார்கள்.
முருகனின் வாழ்க்கை மெதுவாக வெளிச்சம் கண்டது.
முன்பு கதவத்தடித்த சாவுகாரன், இப்போது அவனுடைய வீட்டு
வாசலில் குனிந்து பேசினான். முருகனின் உள்ளத்தில் பழைய காயம் இன்னும் இருந்தது.
அவனை தாழ்த்தியவர்களை மறக்க முடியவில்லை. ஆனாலும் அவன் பழிவாங்கவில்லை. “விவசாயி
உதவி செய்யும் கையை நிறுத்தக்கூடாது” என்று முடிவு செய்தான். அதுவே அவனுடைய
உண்மையான வெற்றி.
அவன் வெற்றியில் நிற்காமல், மற்ற இளைஞர்களுக்கான பயிற்சி
மையம் ஆரம்பித்தான். ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக organic farming கற்றுக்கொடுத்தான். “நிலத்தை விட்டு போகாதீர்கள், இந்த மண்ணே உங்களுக்கு உயிர்
தரும்” என்று சமூகத்தில் விழிப்புணர்ச்சி பரப்பினான். பிள்ளைகள் வெளிநாடு சென்று
படித்து திரும்பி பண்ணையை நடத்த ஆரம்பித்தார்கள்.
முருகனின் வியர்வை மண்ணில் விழுந்ததல்ல, மக்களின்
மனசுக்குள்ளும் விழுந்தது. அவனுடைய வாழ்க்கை கதை கேட்டவர்கள் கண்களில் நீர் வந்து
விட்டது. ஏனெனில் அது ஒரே முருகனின் கதை இல்ல, ஒவ்வொரு விவசாயியின் பெருமை
முருகன் நிலம் பசுமையாய் மாறியிருந்தாலும், அவனுள் ஓர்
அமைதியின்மை. சூரியன் மறையும் நேரங்களில் அவன் எப்போதும் நிலத்தின் நடுவே நின்று
வானத்தை நோக்கிப் பார்த்தான். அந்த வானம் எத்தனை முறை அவனை ஏமாற்றியது! மழை வரும்
போல கருமேகமாகி மறுபடியும் சிதறிப்போன அந்த நாட்கள் அவன் நினைவில் குத்திய
காயங்களாகவே இருந்தன.
ஒரு நாள் மனைவி வந்தாள். அவள் முகத்தில் சோர்வு, கண்ணில்
கண்ணீர். அவள் கையை முருகனின் தோளில் வைத்துக் கேட்டாள்:
“முருகா… இப்போ உன் நிலம் பசுமையா இருக்கு. உன் உழைப்புக்கு
விளைச்சல் வந்துருச்சு. ஆனா நீ இன்னும் சிரிச்ச மாதிரி தெரியலையே?”
முருகன் சற்று நேரம் அமைதியாக இருந்தான். பிறகு மெதுவாக
சுவாசம் விட்டுப் பேசினான்:
“நிலம் பசுமை தந்தாலும், என் மனசு இன்னும் வறண்டு போச்சு
தங்கமே. நான் எத்தனை நாள் பிள்ளைகளின் பசியைக் கண்டு கண்ணீர் விட்டேன், உன்
கண்களில் அழுகையைக் கண்டேன். அந்த நினைவு இன்னும் மனசை விட்டு போகவில்லை. நான்
வெற்றியடைகிறேன்னு சொல்லிக்கொள்வேனே தவிர, உள்ளம் இன்னும் காயம்தான்.”
மனைவி அவன் கையை இறுகப் பிடித்தாள்.
“அந்த காயம்தான் உன்ன வலிமையாக்குது முருகா. அந்த
கண்ணீர்தான் உன் வேர்க்கும் உரம். அந்த வலியைக் கூட மறக்காதே. ஆனா அதுவே உன்னை
சிரிக்காமல் ஆக்கக் கூடாது.”
அடுத்த மாதம் ஊரில் பெரிய விழா. அரசு அதிகாரிகள், ஊராட்சி
தலைவர், ஊடகங்கள் எல்லாம் கூடி இருந்தார்கள். முருகனுக்கு “மாதிரி விவசாயி” விருது
வழங்கப்பட்டது. மேடையில் அவனைப் பாராட்டி மக்கள் கைத்தட்டினார்கள்.
முருகன் அந்த கைத்தட்டல்களின் சத்தத்தைக் கேட்டவுடனே
கண்களில் நீர் வழிந்தது.
அந்தக் கைத்தட்டல்களுக்குள் அவனை முன்பு கேலி செய்தவர்கள்,
அவமானப்படுத்திய உறவினர்களின் முகங்களும் இருந்தன.
அவன் மனதில் ஓடியது – “நேற்று என்னை கேலி செய்தவங்க,
இன்றைக்கு என்னை கைத்தட்டுறாங்க. இதுதான் வாழ்க்கையா? மண்ணுக்கு வியர்வை
சிந்தினவனுக்கு கிடைக்கிற விலைதானா?”
விருது பெற்ற பின் வீடு திரும்பிய முருகன் இரவு முழுக்க
தூங்கவில்லை.
வெற்றி ஒரு பக்கம் இருந்தாலும், தோல்வியின் நினைவுகள்
இன்னொரு பக்கம் அவனை வலிக்க வைத்தது.
அடுத்த நாள் ஒரு அதிர்ச்சி. பழைய சாவுகாரன் அவன் வீட்டின்
வாசலில் வந்தான்.
முன்பு அவனை “வட்டி தர முடியலன்னா உன் வீட்டையே
பறித்துடுவேன்” என்று மிரட்டிய அதே சாவுகாரன் இப்போது அவனது முன் குனிந்து
நின்றான். குரல் துடித்தது:
“முருகா… மன்னிச்சுடு. நான் உன்னைத் தாழ்த்தினேன். ஆனா
இப்போ என் குடும்பம் கடனில் சிக்கிச்சு இருக்கு. நீங்க தான் உதவணும்.”
முருகனின் உள்ளம் கொந்தளித்தது. மனதில் நெருப்பு பற்றியது.
“இவன் தான் என் பிள்ளை பசித்த தினத்துக்கு காரணம். என் மனைவி கண்ணீர் வடித்த
தினத்துக்கு காரணம். இப்போ உதவி கேக்கிறானா?”
அவன் கண்ணில் கோபம் எரிந்தது. ஆனால் அடுத்த நொடியில் அவன்
தந்தையின் குரல் மனதில் ஒலித்தது:
“மண்ணை விட்டு போகாதே… மனிதத்தையும் விட்டு போகாதே.”
முருகன் தலையைத் தூக்கி சாவுகாரனைப் பார்த்தான்.
“உன்னால நான் அழுதேன். ஆனா இப்போ உன்னாலவே சிரிக்கக்
கூடாதா? போ, உன் குடும்பத்தை காப்பாத்திக்கோ. உன் கடனை நான் அடைக்கிறேன். ஆனா
இனிமே விவசாயியை யாரும் தாழ்த்தக் கூடாது.”
அந்த வார்த்தைகளைச் சொன்னவுடனே அவனுடைய உள்ளத்தில் இருந்த
வெறுப்பு கண்ணீரோடு வெளியேறியது. சாவுகாரனின் கண்ணீரோடும் அவனுடைய கண்ணீரும்
சேர்ந்து, மண்ணில் விழுந்தன.
அந்த இரவு முருகன் வானத்தை பார்த்தான். இந்த முறை வானம்
அவனை ஏமாற்றவில்லை. துளி துளியாக மழை பெய்தது.
அந்த மழை அவனுடைய வெற்றிக்கான முத்திரையாக இருந்தது.
முருகன் வெற்றியோடு நின்றுவிடவில்லை. கிராம இளைஞர்களை ஒன்று
திரட்டி, அவர்களுக்கு organic farming கற்றுக்கொடுத்தான்.
“நகரத்துக்கு போய் coolie வேலை பண்ண வேண்டிய அவசியம் இல்லை.
நிலம் உன்னை வளர்க்கும். உன் வியர்வை வீணாகாது” என்று அவன் சொன்ன வார்த்தைகள்
இளைஞர்களின் மனத்தில் நம்பிக்கை விதையாய் முளைத்தது.
அவன் பண்ணையின் கதவு எப்போதும் திறந்திருந்தது. பணம் இல்லாத
விவசாயிகள் கூட அங்கு வந்து பயிற்சி பெற்று சென்றார்கள்.
அவனுடைய வாழ்க்கை சுரங்கத்தில் இருந்து வெளிச்சமாய்
மாறியது.
முருகனின் பண்ணை இப்போ ஊருக்கே மாதிரி இல்லாமல்,
மாவட்டத்துக்கே ஒரு பாடசாலையாய் மாறிவிட்டது. பசுமை சூழ்ந்த வயல்களில் தினமும்
பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடிச் சாகுபடிக்கான பயிற்சி பெற்றார்கள். பசுமை
பார்த்தாலே உள்ளம் அமைதியாகும்.
முருகன் கற்றுக் கொடுத்தது விவசாயம் மட்டும் இல்ல;
“வாழ்க்கையை எப்படிச் சாகுபடி செய்வது” என்பதையும்.
அவன் அடிக்கடி சொல்லும் வார்த்தை –
“விதை விதையும்போது அது எப்படிப்பட்ட மண்ணில் விழுந்ததென்று
கவலைப்படுவதில்லை. அது தன்னால் முடிந்தவரை வளர்கிறது. நாமும் அப்படித்தான்.
சூழ்நிலை எப்படியிருந்தாலும் நம்ம வியர்வை, நம்ம நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை
முளைக்கும்.”
முருகனின் சாதனை ஊருக்கு மட்டும் இல்லாமல், வெளிநாடுகளிலும்
பேசப்பட்டது. ஒரு நாள் அரசு அலுவலர் வந்து,
“முருகா, உங்களை வெளிநாட்டிலிருக்கும் விவசாய மாநாட்டுக்கு
அழைச்சிருக்காங்க. நீங்க போய் உங்கள் அனுபவத்தைச் சொல்லணும்” என்றார்.
முருகன் அச்சமடைந்தான். “நான் மாத்திரம் ஒரு சாதாரண
விவசாயி. ஆங்கிலம் கூட சரியா தெரியாது. அங்கே போய் என்ன பேச முடியும்?”
ஆனால் மனைவி அவன் கையைப் பிடித்து,
“உன் வியர்வை தான் உன் மொழி முருகா. உலகம் உன் ஆங்கிலத்தைக்
கேக்க வரல; உன் அனுபவத்தையும் உன் வலியையும் கேக்குது” என்றாள்.
அந்த வார்த்தைகள் முருகனுக்கு புதிய தைரியம் தந்தன.
அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளின்
விவசாயிகள் கூடியிருந்த கூட்டத்தில், முருகன் தன் கதையை சொன்னான்.
அவன் பேசும்போது, உலக விவசாயிகள் கண்களில் நீர் வழிந்தது.
ஏனெனில் உழைப்பின் காயங்கள் மொழி தெரியாமலேயே
புரிந்துவிட்டன.
ஆனா எல்லாரும் அவனை நேசிக்கவில்லை.
ஊரிலிருந்த சில பண்ணையார்கள் முருகனைப் பார்த்து
பொறாமைப்பட்டார்கள்.
“இவன் நம்ம மாதிரி நிலம் இல்லாம இருந்தவன். இப்போ எங்க மேல
மேலே போகிறான். இதை நிறுத்தணும்” என்று அவர்கள் கூடி அவனை தாழ்த்த முயன்றனர்.
ஒரு நாள் அவனை ஊர்மக்கள் முன்னால் அவமானப்படுத்தினார்கள்:
“வெளிநாட்டுப் போய் இரண்டு வார்த்தை பேசினா அவன் பெரிய
விவசாயியா? இன்னும் வட்டி அடைக்காத விவசாயிகள் உங்க கிராமத்திலே இருக்காங்க.
அவர்களை காப்பாத்தியாச்சா?”
அந்த வார்த்தைகள் முருகனை வலிக்க வைத்தன.
ஆனால் அவன் அமைதியாகப் பேசினான்:
“நான் பெரியவன் அல்ல. என் நிலம் பெரியது அல்ல. என்
உழைப்புதான் என்னை இங்கே நிறுத்தியது. நான் ஒவ்வொரு விவசாயியின் கண்களில்
இருக்கும் கண்ணீரைப் பார்க்கிறேன். அவர்கள் அழுதால் நான் சிரிக்க முடியாது. நான்
வாழ்வது அவர்களுக்காகத்தான். எனவே என்னை அவமானப்படுத்தினாலும், நான் மண்ணைத்
தாழ்த்தமாட்டேன்.”
அந்த வார்த்தைகள் கேட்ட பிறகு, மக்கள் கைதட்டினர். அவனை
வெறுத்தவர்களின் சதி தகர்ந்து போனது.
ஒரு நாள் ஒரு பத்திரிகையாளர் முருகனிடம் கேட்டார்:
“உங்களின் வெற்றியின் ரகசியம் என்ன?”
முருகன் சிரித்தான்.
“வெற்றியின் ரகசியம் என்னோட வியர்வை இல்லை. அது என்
மனைவியின் கண்ணீர், என் பிள்ளைகளின் பசி, என் உறவினர்களின் கேலி, என் நண்பர்களின்
ஊக்கம் – எல்லாம் சேர்ந்து வந்த பாடங்கள். அந்த வலியில்லாம என் வியர்வைக்கும்
அர்த்தம் இல்லை.”
அவன் வெற்றி பெற்ற பிறகு, முன்னால் அவனை விட்டு
விலகியிருந்த உறவினர்கள் மீண்டும் வந்து சேர்ந்தார்கள்.
முருகன் யாரையும் தள்ளவில்லை.
“உறவுகள் தண்ணீர மாதிரி. சில நேரம் வற்றிப் போகும். ஆனால்
நம்மிடம் இருந்த குளம் நிரம்பினால், அவர்கள் திரும்ப வருவார்கள். நாம் தள்ளாமல்
அணைத்துக் கொள்ள வேண்டும்” என்றான்.
அவனது நண்பர்கள் பெருமையோடு நின்றனர்.
“நம்ம முருகன் தான் உண்மையான நாயகன்” என்று சொன்னார்கள்.
ஒரு பெரிய விழாவில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முன்னால்
முருகன் கடைசியாக பேசியது:
“நான் ஒரு சாதாரண விவசாயி தான். என் கையில் பேனா இல்லை,
புத்தகம் இல்லை. ஆனா, மண்ணும் வியர்வையும் இருந்தது.
மழை ஏமாற்றினாலும், சாவுகாரன் சுமையாக்கினாலும், நம்ம மனசு
நம்மை விட்டுப் போகக் கூடாது.
வெற்றி யாருக்காவது பிறப்பிலேயே கிடைக்காது.
வெற்றி என்ற விதை எல்லோருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை
வளர்க்க நம்ம வியர்வை உரமாக வேண்டும்.
நான் வெற்றி பெற்றது எனக்காக இல்ல.
என்னைப் போல இன்னும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் அழ வேண்டாம்
என்பதற்காக.”
அவன் பேசும்போது, கூட்டத்தில் இருந்த பல இளைஞர்களின்
கண்களில் கண்ணீர் வழிந்தது.
அவர்கள் தங்களுக்குள் சத்தியமிட்டனர் –
“நாம் மண்ணை விட்டு போகமாட்டோம். நம்ம வியர்வை மண்ணில்
விழும் வரை, இந்த நாட்டின் வயல்கள் பசுமையாக இருக்கும்.”
முருகனின் பெயர் இன்று ஊருக்கு மட்டும் இல்ல; நாட்டுக்கே
பெருமை. அவன் பண்ணை “வியர்வையின் வளம்” என்ற பெயரில் ஒரு கல்விக் கூடமாக மாறியது.
அங்கே இளைஞர்கள் விவசாயம் கற்றுக்கொண்டு, புதிய தொழில்நுட்பங்களையும், பழைய
மண்ணின் அறிவையும் ஒன்றிணைத்துக் கொண்டனர்.
முருகன் ஒருபோதும் பணத்தை தன்னுக்காக மட்டும்
சேர்க்கவில்லை.
“நம்ம வயலின் பசுமை தான் நம்ம செல்வம்” என்றான்.
அவன் சும்மா வெற்றி அடைந்தவன் இல்ல; கஷ்டத்தை உரமாக்கி
வெற்றியை வளர்த்தவன்.
முருகனின் பிள்ளைகள், முன்னாள் பசியால் அழுதவர்கள், இப்போது
கல்வியிலும் வாழ்விலும் உயர்ந்தனர்.
ஆனால் அவர்கள் அப்பாவைப் போலவே மண்ணோடு சேர்ந்து இருந்தனர்.
“அப்பா, எங்களை மருத்துவராக, பொறியாளராக ஆக்க வேண்டாம்.
உங்களைப் போல மண்ணைத் தான் காப்போம்” என்று சொன்னார்கள்.
முருகனின் கண்கள் நீர்த்தது.
“என் வியர்வையின் உண்மையான பயிர் என் பிள்ளைகளின் மனசே.
அவர்கள் மனசில் விதைத்த விதை தான் இந்த நாட்டின் எதிர்காலம்.”
முருகனை முன்னால் கிண்டல் செய்தவர்களே இப்போது அவனிடம்
கற்றுக்கொண்டனர்.
ஊர் முழுவதும் பசுமை நிறைந்தது.
இனி கடன் வாங்கி வட்டி கொடுத்து அழும் விவசாயி இல்லை.
அவன் ஆரம்பித்த “விவசாயிகள் நம்பிக்கை குழு”
நூற்றுக்கணக்கான குடும்பங்களை மீட்டது.
ஒரு நாள் அந்தக் குழுவின் கூட்டத்தில், ஒரு மூதாட்டி
கண்ணீர் துடைத்து சொன்னாள்:
“முருகா, எங்க வீட்டில் உனக்கு எப்போவும் பசி
தீர்ந்ததில்லை. ஆனா இன்று எங்கள் பேரன்கள் பசியால் அழுவதில்லை. நீ தான் எங்க
தேவன்.”
முருகன் அந்த வார்த்தை கேட்டு அழுதான்.
அவன் தேவனல்ல; ஆனா மண்ணின் மனித தேவதை.
ஆண்டுகள் கழிந்தது.
முருகன் வயதாகி, உடல் பலவீனமாயிற்று.
ஆனால் வயல் கைவிடவில்லை.
ஒரு மாலை சூரியன் மறையும் பொழுது, அவன் வயலில் வேலை
செய்தபடியே மண்ணில் விழுந்தான்.
கையில் இருந்த விதை மண்ணில் விழுந்தது.
அந்த விதையோடு அவன் உயிரும் கலந்து விட்டது.
ஊர் மக்கள் எல்லோரும் வந்து அழுதார்கள்.
“முருகன் இறந்துவிட்டான்” என்று சொல்லவில்லை.
“முருகன் விதையாய் மண்ணில் கலந்து விட்டான்” என்றார்கள்.
முருகனின் கல்லறை அருகே, ஒரு பெரிய கல் வைக்கப்பட்டது.
அதில் அவன் சொன்ன வார்த்தை பொறிக்கப்பட்டிருந்தது:
“வெற்றி மழையிலிருந்து வராது.
வெற்றி வியர்வையிலிருந்து மட்டுமே முளைக்கும்.
மண்ணை விட்டு போகாதீர்கள்; மண்ணே உங்களை வாழ வைக்கும்.”
அந்தக் கல்லை படிக்கும்போது, இளைஞர்கள் கண்கள் கண்ணீரால்
நிரம்பின.
ஆனால் அந்தக் கண்ணீர் துக்கத்தால் அல்ல; பெருமையால்.
ஊர் முழுவதும் இன்று பசுமையாக உள்ளது.
முருகன் உயிரோடில்லை; ஆனாலும் ஒவ்வொரு பச்சை இலைக்கும்,
ஒவ்வொரு கதிருக்கும், ஒவ்வொரு துளி தண்ணீருக்கும் அவனின் வியர்வையின் மணம்
நின்றுகொண்டே இருக்கிறது.
முருகன் ஒரு சாதாரண விவசாயி தான்.
ஆனால் அவனின் வியர்வை – நூறு தலைமுறையையும் காப்பாற்றும்
சக்தியாக மாறியது.
இன்று “விவசாயியின் வியர்வை” கதையை படிக்கும் ஒவ்வொருவரும்
ஒரே உணர்வுடன் நிற்கிறார்கள்:
👉 “வாழ்க்கை விதை, கண்ணீர் மழை, வியர்வை உரம்.அப்படி
சேர்ந்தால் தான் உண்மையான வெற்றி முளைக்கும்.”
🌾 “விவசாயியின் வியர்வை” 🌾
***
Good
ReplyDeleteWow
ReplyDelete